பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் யூன் 7 ஆம் திகதிவரை மேலும் நீடிப்பு – இராணுவத் தளபதி

தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் யூன் 7 ஆம் திகதிவரை தொடர்ந்தும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொவிட் பரவல் தடுப்பு தேசிய செயலணி தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் கொவிட் தடுப்பு தேசிய செயலணி உறுப்பினர்களும் இடையில் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதற்கமைய, எதிர்வரும் மே 31 மற்றும் யூன் 4 ஆம்திகதிகளில் கட்டுப்பாடு தளர்த்தப்படாமல், தொடர்ந்தும் யூன் 7 ஆம் திகதிவரை நீடிக்கும் என இராணுவ தளபதி தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்