மட்டக்களப்பில் கொரோனாதொற்றினால் மேலும் ஒருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் இயக்குநர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.

வெல்லவேலி சுகாதார மருத்துவ அதிகாரியின் பெரியபோரதிவை பகுதியைச் சேர்ந்த (73 வயது) இவர், மட்டு.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் நேற்று (வியாழக்கிழமை) சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியர் நாகலிங்கம் மயூரன் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய மாவட்டத்தில் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தலை கருத்திற்கொண்டு, சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிப்பதுடன், அநாவசியமாக வீடுகளை விட்டு வெளியேறுவதனை தவிர்த்துக்கொள்ளுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்