பொருட்களை அதிக விலைக்கு விற்றால் அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்படும் : அமைச்சர் லசந்த அழகியவண்ண
பயணக் கட்டுப்பாடுகள் அமுலிலுள்ளதால் வியாபாரத்துக்கு அனுமதி பெற்ற கடைகள் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்தால் அவர்களின் அனுமதிப்பத்திரம் உடனடியாக ரத்து செய்யப்படும் என அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
மேலும் சம்பந்தப்பட்ட கிராம சேவகர் பிரிவிலுள்ள மற்றொரு கடைக்கு அனுமதிப்பத்திரத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவு சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.
இதனிடையே கொண்டுசென்று விற்றல், வீட்டுக்கு வீடு பொருள் விநியோகம், ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் இரு கடைகளைத் திறத்தல் என பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களைப் பெறுவதற்கு வசதியாக அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதிக விலைக்கு பொருட்களை விற்பது தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபை(ஹொட்லைன் 1977) பெறும் முறைப்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மேலும் கூறினார்.

கருத்துக்களேதுமில்லை