கிளிநொச்சியில் வெடிக்காத நிலையில் குண்டு மீட்பு
கிளிநொச்சி- உருத்திரபுரம், சிவநகரில் வெடிக்காத நிலையில் தாக்குதல் விமானத்தினால் வீசப்பட்ட குண்டு ஒன்று காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.
உருத்திரபுரம் பகுதியிலுள்ள காணியொன்றினை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டவர்கள், குறித்த குண்டை அவதானித்துள்ளனர்
அதனைத் தொடர்ந்து சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி காவல்துறையினருக்கு அவர்கள் தகவல் வழங்கியுள்ளனர்.
குறித்த தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் படையினர் இணைந்து, குண்டை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை