5000 ரூபா கொடுப்பனவு வழங்க நடவடிக்கை!
ஜூன் 2 முதல் 5000 ரூபாய் கொடுப்பனவு மீண்டும் வழங்கப்படும் என்று சமுர்த்தி, வதிவிடப் பொருளாதார, நுண்நிதிய, சுயதொழில் மற்றும் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க கூறியுள்ளார்.
அதன்படி, சமூர்த்தி பெறுநர்கள், பிற அரசு கொடுப்பனவு பெறுநர்கள், குறைந்த வருமானம் ஈட்டுபவர்கள் மற்றும் கொரோனா காரணமாக அன்றாட வருமானத்தை இழந்தவர்கள் இந்த கொடுப்பனவுக்கு உரிமை பெறுவார்கள்.
இதேவேளை கொரோனாவால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை கருத்திற்கொண்டு அரசாங்கத்தால் மூன்றாவது முறையாக மக்களுக்கு 5000 ரூபாய் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை