வெடிபொருட்கள் வைத்திருந்ததாக முன்னாள் போராளி ஒருவர் யாழில் கைது!
வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பிரதேசத்தில் முன்னாள் போராளி ஒருவர் கிளைமோர் குண்டு உள்ளிட்ட வெடிபொருள்களுடன் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஜனவரியில் இராணுவச் சிப்பாய்க்கு தாக்கி தலைமறைவாகி இருந்து பின்னர் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளியே அவரது மீன்வாடியில் வைத்து இன்று மாலை 4.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து கிளைமோர் வெடிகுண்டு, சார்ஜர் உள்ளிட்ட பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பயங்கரவாத விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தன
கருத்துக்களேதுமில்லை