சம்மாந்துறையில் கட்டாயம் விலைப்பட்டியல் காட்சிப்படுத்தப்படிருத்தல் வேண்டும் :  பிரதேச செயலாளர் ஹனிபா வர்த்தகர்களுக்கு அறிவிப்பு!

(ஐ.எல்.எம். நாஸிம் )
சம்மாந்துறை பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட நடமாடும் வியாபாரிகளுக்கான அறிவுறுத்தல் வழங்கும் நிகழ்வு சம்மாந்துறை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் சம்மாந்துறை பிரதேச சபை செயலாளார் எம்.ஏ.கே முஹம்மட் தலைமையில் இன்று (28) மாலை இடம் பெற்றது.
இக்கலந்துரையாடலின் போது பிரதேசத்தின் சமகால விடயங்கள் ஆராயப்பட்டதுடன்  வர்த்தகர்களினால் கட்டாயம் விலைப்பட்டியல் பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்படிருத்தல் வேண்டும் எனவும் இக்கட்டான சூழ் நிலை என்பதால் பொருட்களின் விலைகளை அதிகமாக விற்பனை செய்ய வேண்டாம் எனவும் அனைத்து பிரதேசங்களிலும் அத்தியவசிய  பொருட்கள் விற்பனை செய்யப்பட வேண்டும் எனவும் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனிபா  நடமாடும் வியாபாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்தார்.
கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற இன் நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனிபா , பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஏ. மஜீட், சம்மாந்துறை பொலிஸ்  நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.எம்.எம் நஜீப், சம்மாந்துறை வர்த்தக சம்மேளன தலைவர் எ.சுலைமா லெப்பை, சம்மாந்துறை வர்த்தக சம்மேளன செயலாளர் எம்.எச்.எம் ஹாரீஸ், நடமாடும் வியாபாரிகள்  உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.