திருமலை வைத்தியசாலைக்கு பி.சி.ஆர் இயந்திரம்

திருகோணமலை மாவட்ட வைத்தியசாலைக்குத் தேவையான பி.சி.ஆர் இயந்திரமொன்றை உடனடியாக அனுப்பிவைப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ உறுதியளித்துள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் நேற்று தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றாளர்களை பரிசோதனை செய்யும் இயந்திரம் இல்லாத காரணத்தினால் நோயாளர்கள் சிரமப்படுவதாகவும் தேவை கருதியே பிரதமரிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா சம்பந்தன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும். அது தொடர்பான மரணங்கள் அடிக்கடி இடம்பெற்று வருகின்றன.

இக்கொரோனா தொற்றாளர்களை பரிசோதனை செய்வதற்கு பி.சி.ஆர் இயந்திரம் வைத்தியசாலையில் இல்லாத நிலையில்  பரிசோதனை மாதிரிகளை   மட்டக்களப்பு மற்றும் கொழும்பு போன்ற தூர இடங்களுக்கு அனுப்பி வைப்பதனால் காலதாமதமும் சிரமங்களையும் எதிர்நோக்கி வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதற்கமைய இந்த உபகரணத்தை அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கையை தாம் மேற்கொள்வதாக பிரதமர் தம்மிடம் வாக்குறுதியளித்தாக இரா,சம்பந்தன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.