இராணுவத்தினரின் மனிதாபிமான பணி-ஆலையடிவேம்பில் வருமானம் குறைந்த குடும்பமொன்றின் வீடமைப்பிற்கான அடிக்கல் நடப்பட்டது

(வி.சுகிர்தகுமார் )

  நாட்டில் நிலவும் இக்கட்டான இச்சூழ்நிலைக்கு மத்தியிலும் இராணுவத்தினர் மனிதாபிமான பணிகளை தொடர்ந்தும் முன்னெத்து வருகின்றனர்.

இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் முற்றும் முழுதாக இராணுவத்தினரால் நிர்மானிக்கப்படவுள்ள வருமானம் குறைந்த குடும்பமொன்றின் வீடமைப்பிற்கான அடிக்கல்லை இன்று நாட்டி வைத்தனர்.

அக்கரைப்பற்று இராணுவ முகாமின் 241ஆம் படையணியின் கட்டளை இடும் அதிகாரி கேணல் ஜானக விமலரெத்தின தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் வி.பபாகரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வீடமைப்பிற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

ஸ்ரீ மருதடி மாணிக்கப்பிள்ளையார் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கஜமுகசர்மாவின் பூஜை வழிபாடுகளோடு ஆரம்பமான அடிக்கல் நடும் நிகழ்வில்
அக்கரைப்பற்று இராணுவ முகாமின் 241ஆம் படையணியின் கட்டளை இடும் அதிகாரி கேணல் ஜானக விமலரெத்தின மற்றும்; பிரதேச செயலாளர் வி.பபாகரன் உள்ளிட்டோர் அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.

பின்னர் நிர்மாணிக்கப்படவுள்ள வீட்டின் அமைப்பு தொடர்பிலான வரைபடத்தை பார்வையிட்டதுடன் மேலதிக தகவல்களையும் பெற்றுக்கொண்டு ஆலோசனைகளையும் வழங்கினர்.

முற்றும் முழுதாக இராணுவத்தின் நிதி மற்றும் ஆளனி உதவியுடன் குறித்த வீடு நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.