யாழில் 13 மத்திய நிலையங்கள் ஊடாக தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் 13 மத்திய நிலையங்கள் ஊடாக தடுப்பூசிகளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக  அம்மாவட்ட செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில், தடுப்பூசி வழங்குதல் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம், மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இன்று (29)  இடம்பெற்றது.

குறித்த கூட்டத்தினைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே க.மகேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு ஐம்பதாயிரம் தடுப்பூசிகளை ஜனாதிபதி ஒதுக்கீடு செய்துள்ளார். குறித்த தடுப்பூசிகள் இன்று அல்லது நாளை கிடைப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது.

இந்நிலையில் முதற்கட்டமாக வைரஸ் தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே தடுப்பூசிகளை வழங்க தீர்மானித்துள்ளோம்.

மேலும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சுமார் 12 அல்லது 13 மத்திய நிலையங்களில் இந்தத் தடுப்பூசிகளை வழங்க உள்ளோம்.

இதேவேளை இரண்டாம் கட்டமாக முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசிகளை வழங்க தீர்மானித்துள்ளோம். ஆகவே மக்கள், அவர்களுக்கு  ஒதுக்கப்பட்ட நேரத்தில் வந்து தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள முடியும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.