வவுனியா திருநாவற்குளத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது: கிராமத்தில் இருந்து வெளியேறத் தடை…

வவுனியா, திருநாவற்குளத்தின் பாதுகாப்பானது இன்று (29.05) மாலை முதல் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், கிராமத்தில் இருந்து வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்திலும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் திருநாவற்குளம் கிராமத்தில் கொவிட் மூன்றாவது அலை தாக்கம் காரணமாக ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், 12 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். அத்துடன் 14 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் கிராமத்தில் கொவிட் பரம்பலைக் கட்டுப்படுத்தும் வகையில் கிராமத்திற்கான நுழைவாயில் மற்றும் கிராமத்தில் இருந்து வெளியேறும் ஒழுங்கைகள் என்பவற்றில் இராணுவத்தினரும், பொலிசாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், கிராமத்தில் இருந்து மக்கள் வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

கிராமத்திற்குள் நடமாட்டதை கட்டுப்படுத்தி கொவிட் பரம்பலை தடுப்பதற்காகவே இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு கடமையில் இருக்கும் பொலிசார் தெரிவித்துளளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்