மட்டக்களப்பு – வாகரையில் சௌபாக்கிய நிகழ்ச்சிதிட்டத்தின் விவசாய தானியப் பயிர் செய்கை அறுவடை விழா!

ஜனாதிபதியின் எண்ணக்கருவில் உருவாகிய சுபீட்சத்தின் நோக்கு சௌபாக்கிய நிகழ்ச்சிதிட்டத்தின் கீழ்  இறக்குமதி விவசாய தானியப் பயிர் செய்கை மூலம் செய்கை பண்ணப்பட்ட  பயறு அறுவடை விழா மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கதிரவெளியில் இடம்பெற்றது.
வாகரை பிரதேசத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சுமார் 300 ஏக்கரில் மேற்குறித்த இறக்குமதி தானியப் பயிர் செய்கையில் ஒன்றான பயறு தானியம் பயிர் செய்கை முதற்கட்டமாக செய்கை பண்ணப்பட்டது.
இதனை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் பிரதேச செயலகங்களுக்குரிய அபிவிருத்தி குழுக்களின் பிரதித் தலைவரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அமைப்பாளருமான பரமசிவம் சந்திரகுமார் ஆரம்பித்து வைத்திருந்தார்.
வாகரை பிரதேசமானது பல்வேறுபட்ட அனர்த்தங்களினால் பெரிதும் பாதிக்கப்பட்டு பொருளாதாரத்தில் பின்தள்ளப்பட்ட பிரதேசமாக காணப்பட்ட நிலையினை கருத்தில் கொண்டு மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் முகமாக இத்திட்டம் வாகரையில் மேற்கொள்ளப்பட்டதாக தமிழ் பிரதேச அபிவிருத்தி குழுக்களின் பிரதித் தலைவர் பரமசிவம் சந்திரகுமார் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் குறித்த பயிர் செய்கையில் தன்னிறைவு கண்டு ஜனாதிபதியின் எண்ணத்தை நிறைவேற்றி, வெற்றியும் கண்டுள்ளதாக மேலும் அவர் தெரிவித்தார்.
குறித்த திட்டமானது ஜனாதிபதியின் எண்ணக் கருவில் உருவாகி ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ அவர்களின் நேரடியான ஆலோசனையில் நாடு பூராகவும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அந்தவகையில் வாகரையிலும் அபிவிருத்தி குழு பிரதித் தலைவர் பரமசிவம் சந்திரகுமாரின் வழிகாட்டலில் சோலை விவசாய உற்பத்தியாளர் சம்மேளத்தின் நெறிப்படுத்தலில் குறித்த தானியப்பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் மூலம் பிரதேச மக்கள் பாரியளவில் நன்மை அடைந்துள்ளதாகவும் தங்களுக்கு உதவிய ஜனதிபதி மற்றும் தமிழ் பிரதேச அபிவிருத்தி குழுக்களின் பிரதித் தலைவருமாகிய ப.சந்திரகுமாரிற்கும் இதன்போது தமது நன்றியையும் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.