முல்லைத்தீவு,மாணிக்கபுரத்தில் கஞ்சாவுடன் மூவர் கைது

முல்லைத்தீவு விசுவமடு பகுதி மாணிக்கபுரத்தில் கஞ்சாவுடன் மூன்று பேரை புதுக்குடியிருப்பு காவற்துறையினர் கைதுசெய்துள்ளார்கள். 29.05.21 அன்று இரவு இச்சம்பவம் பதிவாகியுள்ளது.

மாணிக்கபுரம் கிராமத்தில் கஞ்சா பாவனை இடம்பெற்று வருவதாக புதுக்குடியிருப்பு காவற்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த பகுதியில் சோதனை நடடிக்கையினை முன்னெடுத்துள்ள போது காஞ்சா அடித்துக்கொண்டிருந்த மூவரை கைதுசெய்துள்ளார்கள். இவர்கள் மூவரிடம் இருந்து 230 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

தர்மபுரம் பகுதியில் இருந்து ஒட்டுசுட்டான் பகுதிக்கு வியாபாரத்திற்காக கஞ்சாவை கொண்டு செல்வதற்கு தயாரான நிலையில் கஞ்சா அடித்துக் கொண்டிருந்த போதே குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது
கைதுசெய்யப்பட்ட மூவரிடமும் புதுக்குடியிருப்பு காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளனர்

நாட்டில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் அன்றாட உணவினை பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வரும் நிலையிலும் கிராமங்களில் கஞ்சா,கசிப்பு பாவனைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்