கோப்பாயில் ட்ரோன் கமரா ஊடாக கண்காணிப்பு!
கோப்பாய் காவல் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில் இலங்கை விமானப் படையின் உதவியுடன் பயணத் தடை காலப்பகுதியில் ட்ரோன் கமராவின் உதவியுடன் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளை மீறுவோரைக் கைது செய்யும் பணி கடந்த ஒரு வாரமாக முன்னெடுக்கப்படுகிறது.
முதன்முறையாக யாழ்ப்பாணம் மாநகரில் நேற்று முன் தினம் கண்காணிப்புப் பணி ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் கோப்பாய் காவற்துறை பிரிவில் இந்தப் பணி இன்று முன்னெடுக்கப்படுகிறது.


கருத்துக்களேதுமில்லை