மாத்தறையில் பிரதமரின் கண்காணிப்பின் கீழ் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம்

மாத்தறை மாவட்ட மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுகின்றமை குறித்து கண்காணிப்பதற்காக  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (30) முற்பகல் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.

அதற்கமைய மாத்தறை வெல்லமடம மஹிந்த ராஜபக்ஷ கல்லூரியில் நிறுவப்பட்டுள்ள தடுப்பூசி மையத்திற்கு விஜயம் செய்த  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தடுப்பூசி வழங்கும் செயன்முறை குறித்து பார்வையிட்டார்.

மக்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்தை தொடர்ச்சியாக செயற்படுத்த வேண்டும் என சுட்டிக்காட்டிய பிரதமர், மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் தடுப்பூசி வழங்கும் திட்டத்தை செயற்படுத்துமாறும் அறிவுறுத்தினார்.

அரச அதிகாரிகள், உள்ளூராட்சி நிறுவனங்களின் துப்புரவுத் தொழிலாளர்கள், சுகாதார சேவை அல்லாத அத்தியவசிய சேவை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் மாத்தறை மஹிந்த ராஜபக்ஷ கல்லூரியில் நிறுவப்பட்டுள்ள தடுப்பூசி மையத்தில் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டனர்.

குறித்த சந்தர்ப்பத்தில் அமைச்சர் டலஸ் அழகப்பெரும, இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர, பாராளுமன்ற உறுப்பினர்களான நிபுன ரணவக, கருணாதாச கொடிதுவக்கு, வீரசுமன வீரசிங்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்