அகில இலங்கை தாதியர் சங்கம் சுகயீன விடுமுறை போராட்டத்தில்…

சுகயீன விடுமுறை போராட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை முதல்  ஈடுபட்டுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.

கொரோனா சிகிச்சைகளில் ஈடுபட்டுவரும் தாதியர்களுக்கு உள்ள பிரச்சினைகளுக்கு சரியான தீர்வு வழங்கப்படவில்லை என தெரிவித்தே அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமது பிரச்சினைகள் தொடர்பில் அதிகாரிகளுக்கு அறிவித்த போதிலும் அதற்காக சரியான தீர்வு வழங்கப்படவில்லை என்பதால், இந்த தீர்மானத்தை எடுத்ததாக  சங்கத்தின் தலைவர் எச்.எம்.எஸ்.பி.மெதிவத்த தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் இன்று காலை முதல் நாளை காலை வரையில் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்