இன்றிலிருந்து 5000 ரூபாய் நிவாரண நிதி வழங்கும் பணிகள் ஆரம்பம்…

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான 5000 ரூபாய் நிவாரண நிதி வழங்கும் பணிகள் இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதற்காக 30 மில்லியன் ரூபாயினை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்படகிறது.

சமுர்த்தி பெறுநர்கள், தொழில் இழந்தோர் மற்றும் குறைந்த வருமானம் பெறுவோருக்கு இவ்வாறு நிவாரண நிதி வழங்கப்படவுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்