அக்கரைப்பற்றிலிருந்து கொழும்பு நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ்;48 பேர் கைது!

தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறி அக்கரைப்பற்றிலிருந்து கொழும்பு நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ்ஸொன்று நேற்றிரவு இங்கினியாகல, நாமல் ஓயா பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறியமைக்காக பஸ்ஸின் நடத்துடன் மற்றும் சாரதி உட்பட மொத்தம் 48 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான சந்தேக நபர்கள் அனைவரும் இன்று அம்பாறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்