யாழில் இடம்பெற்ற வாகன விபத்தில் 08 பேர் காயம்

யாழ்ப்பாணம்- கண்டி நெடுஞ்சாலையிலுள்ள எழுதுமட்டுவாழ் பகுதியில் இன்று (31) காலை, வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 8பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்தில் காயமடைந்த 8 பேரும், சிகிச்சைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எழுதுமட்டுவாழ் பகுதியிலுள்ள சோதனை சாவடிக்கு அருகில் குறித்த வாகனத்தை நிறுத்துவதற்கு முற்பட்ட வேளையில், வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறையினரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்