நடிகை பியூமி ஹன்சமாலி மற்றும் சந்திம ஜயசிங்க பிணையில் விடுதலை!

தனிமைப்படுத்தல் சட்டத்​தை மீறினர் என்ற குற்றச்சாட்டின் பேரில், சந்திமல் ஜெயசிங்க மற்றும் மொடல் பியாமி ஹன்சமாலி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

அவ்விருவரும், ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான ரொக்கப் பிணையில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இவ்விருவரும் இணைந்து ஐந்து நட்சத்திர ஹோட்டலில், நேற்றிரவு பிறந்தநாள் வைபவமொன்றை ஏற்பாடு செய்திருந்துள்ளனர். அதில் 12 பேர் பங்கேற்றிருந்தனர் என ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது. எனினும், அந்த பிறந்த நாள் வைபவத்தில் 22க்கும் 25க்கும் இடைப்பட்டவர்கள் பங்கேற்றுள்ளனர் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்