யாழில் கோவிட் – 19 தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல்

கோவிட் – 19 தொடர்பான யாழ்ப்பாண உயர்மட்ட கலந்துரையாடல்நேற்று (31) இடம்பெற்றது.
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத்தலைவர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் இடம்பெற்ற இக் இணையவழி மூல காணொளி கூட்டத்தொடரில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), திட்டமிடல் பணிப்பாளர், அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர், பிரதேச செயலகர்கள், அரச உயர் அதிகாரிகள் என்போர் கலந்து கொண்டனர்.

கோவிட் – 19 வைரஸ் தாக்கத்தால் யாழ் மாவட்டத்தில் தனிமைபடுத்தப்பட்டுள்ள குடும்பங்கங்களின் நிலமைகள், முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களுக்கான நிலமைகள் தொடர்பில் ஆராயப்பட்டு அவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குவது உறுதிப்படுத்த வேண்டும், மற்றும் தடுப்பூசி வழங்கல் தொடர்பாகவும் உள்ளூர் விவசாயிகளின் சந்தைப்படுத்தல், அத்தியாவசிய பொருட்கள் விநோயகத்துக்கான “பாஸ் அனுமதி”, அவசர தேவை கருதிய பாஸ் அனுமதி என பலவகையான அவசர தேவைகள் பற்றி கலந்துரையாடப்பட்டது.
*முடக்கப்பட்ட இடங்களுக்கும் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களுக்கும் உணவு உற்பத்தி பொருட்கள், மரக்கறிகளை வழங்கப்படவேண்டும்.
*தடுப்பூசி நிலையங்களை அதிகரிக்குமாறு பிரதேச செயலாளர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
*5000ரூபாய் கொடுப்பனவு வரும் 02ம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படும்.
*தடுப்பூசி போடும் மையங்களை கிராமசேவகர் பகுதிகளுக்கு அருகில் செயற்படுத்தவும்.
*கிராமியகுழுவின் மூலம் தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்
*கோவிட் – 19 காலகட்டத்தில் செயற்படும் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு கையுறை,முகக்கவசம் தடையில்லாமல் வழங்குங்கள்.
*சொந்த இடங்களுக்கு செல்வதற்காக தற்போது உள்ள இடத்தின் கிராமசேவகர்களை உறுதிப்படுத்தி அவர்களை சொந்த இடத்துக்கு செல்வதற்கான வழிசமையுங்கள்.
*அத்தியாவசிய பொருட்களுக்கான வியாபரிகளுக்கு “பாஸ் அனுமதி” வழங்குங்கள்.
*கீரிமலை அந்தியேட்டி மடத்திற்கான அனுமதியை இறுக்கமான கட்டுப்பாடுகளுடன் நடைமுறைப்படுத்துங்கள். (மரணித்தவரின் உறவினரில் இருவர்கள் மாத்திரம் அனுமதிக்கவும்)
*பழப்பொருட்களை நடமாடும் விற்பனை மூலம் விநோயிக்க அனுமதி வழங்கவும்.
*கோவிட் – 19 தடுப்பூசி வழங்கலை துரிதப்படுத்தும் சந்தர்பத்தில் அடுத்த ஐம்பதாயிரம் தடுப்பூசிகளை பெறமுடியும்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.