பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகள் ரத்து!

பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகளை எதிர்வரும் ஜுன் மாதம் 15 ஆம் திகதி வரையில் ரத்துச் செய் ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமாகிய அஜித் ரோஹண இதனை தெரிவித்தார்.

தற்போதைய கொவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காகவும் மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தை செயற்படுத்துவதற்கு அவர்களின் தேவை அவசியமாகியுள்ளதாலும் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதற்கு முன்னர் இம்மாதம் 11 ஆம் திகதி முதல் இன்று (31) வரையில் பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகள் ரத்துச் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்