1000 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

1000 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைவாக நடைமுறைப்படுத்தப்படும் சுபீட்சத்தின் தொலைநோக்கு என்ற வேலைத் திட்டத்தின் கீழ் இந்த பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக அபிவிருத்தி செய்யப்பட உள்ளன.

இந்த வேலைத் திட்டத்தின் கீழ் மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்படவிருக்கும் பாடசாலைகளின் அபிவிருத்தி தட்டங்கள் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸ் தலைமையில் நேற்று (31) ஆராயப்பட்டது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களின் உயர்மட்ட கல்வித்துறை அதிகாரிகளும் இந்த சந்திப்பில் சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்