புங்குடுதீவில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு இறுப்பிட்டி அபிவிருத்தி சங்கத்தினால் உதவி வழங்கல்

 புங்குடுதீவில்  கொரோனா தொற்று அபாயம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள  18 குடும்பங்களுக்கும் , புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற இரு தாதியர்களுக்கும்  புங்குடுதீவு உலக மையம் ஊடாக  இறுப்பிட்டி அபிவிருத்தி சங்கத்தினரின் ( தலைமையகம் – கனடா )  40000 ரூபாய் நிதியுதவியில்  உலருணவு பொருட்கள் , சுகாதார பாதுகாப்பு பொருட்கள்  வழங்கிவைக்கப்பட்டன.
இச்செயற்பாட்டில்  புங்குடுதீவு உலக மையத்தின் செயலாளர்  கருணாகரன் குணாளன் , நிர்வாக குழு உறுப்பினர் கருணாகரன் நாவலன் மற்றும் ஜீவா , ராகுலன் , கிராம சேவகர்களான சசிகாந் , சிறீதரன் , கோகுலன்  ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர் .

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்