பாஸ் நடைமுறைக்கு வர்த்தகசங்கத்தின் அனுமதி பெறத் தேவையில்லை: திலீபன் ஆளுநர் மூலம் நடவடிக்கை!

கொரோனா தாக்கத்தினால் எம்மக்கள் சொல்லொணா துயரத்தினை அனுபவித்து வரும் இந்நேரத்தில்,
அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்ள, அரசாங்கம் சில விதிமுறைகளோடு சில வியாபார நிலையங்களுக்கு அனுமதியளிக்கிறது.
வவுனியா மாவட்டத்தில், இவ் அனுமதியை பெறவேண்டுமாயின் முதலில் வர்த்தக சங்கத்தின் அனுமதியை பெறவேண்டும் என்கிற நடைமுறை இருந்துவந்தது.
இதனால் தாம் பல இன்னல்களை எதிர்கொள்வதாக வியாபார நிலைய உரிமையாளர்கள் என்னிடம் தெரிவித்தனர்.
உடனடியாக ஆளுநர் அவர்களை தொடர்புகொண்டு, மேற்படி விடயத்தை தெரிவித்ததையடுத்து, இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
இனி அத்தியாவசிய தேவைகளுக்கு அனுமதி பெறவேண்டுமாயின், நீங்கள் நேரடியாக உங்கள் பிரிவு பிரதேச செயலாளர் ஊடாக இவ்வனுமதிக்கு விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளுங்கள்.
கொரோனா காலப்பகுதியில் எம்மக்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்பது மட்டுமல்ல, பட்டினியின்றியும் இருக்கவேண்டும் இதுதான் இப்போதைக்கு எனது நோக்கம்.என  பாராளுமன்ற உறுப்பினரும்
மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத் தலைவருமான குலசிங்கம் திலீபன் தெரிவித்துள்ளார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.