கொழும்பு மாநகர சபை மக்களுக்கான அறிவித்தல்

கொவிட் தொற்று நிலைமையால் நாட்டில் விதிக்கப்பட்டுள்ள பயணத்தடையிலும் கொழும்பு மாநகர சபையால் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய சேவைகள் அனைத்தும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக கொழும்பு நகர சபை ஆணையாளர் சட்டத்தரணி றோஷனி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கை பின்வருமாறு….

கொவிட் தொற்று நிலைமையால் நாட்டில் விதிக்கப்பட்டுள்ள பயணத்தடையிலும் கொழும்பு மாநகர சபையால் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய சேவைகள் அனைத்தும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மேலும், அலுவலக சேவைகளும் மெய்நிகர் (online) வழியாக தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வரிப்பணம் மற்றும் வர்த்தக வரி செலுத்துவதற்கு கொழும்பு மாநகர சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் (www.colombo.mc.gov.lk) வாயிலாக மெய்நிகர் (online) முறை மூலம் செலுத்துவதற்கான வசதிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

தங்களுக்கு கொழும்பு மாநகரசபை மூலம் வழங்கப்படும் மேற்படி சேவைகள் தொடர்பாக ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் கீழ்வரும் மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது Whatsapp இலக்கத்திற்கோ (கடிதம், புகைப்படம், வீடியோ, குறுஞ்செய்தி போன்ற எந்தவொரு முறையிலும்) அறிவிக்க முடியும் என்பதை தயவுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

Email : commissioner@colombo.mc.gov.lk
Whatsapp : 07 07 208 208

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.