5000 ரூபாய் கொடுப்பனவு நாளை முதல் மீண்டும் வழங்கப்படும்

5000 ரூபாய் கொடுப்பனவு நாளை முதல் மீண்டும் வழங்கப்படும் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

கொரோனா தொற்று மற்றும் பயணக் கட்டுப்பாடு காரணமாக வருமானத்தை இழந்தவர்களும் குறித்த கொடுப்பனவு வழங்கப்படும் என கூறினார்.

இதேவேளை சமூர்த்தி கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அந்த கொடுப்பனவுகள் தொடர்ந்தும் வழங்கப்படும் என்றும் உதய கம்மன்பில தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்