முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் வெடிப்பு சம்பவம் -பெண் காயம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் சற்று முன்னர்  வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதில், காயமடைந்த பெண், புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

தனது காணியில் இருக்கின்ற பனைமரத்துக்கு அருகாமையில் குப்பைகளை கூட்டி வைத்து நெருப்பு பற்றவைத்துள்ளார். இதன்போதே குண்டு வெடித்துள்ளது. அவருக்கு ஏற்பட்டுள்ள காயங்கள் உயிர்க்கு எவ்விதமான அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்த கூடியவை அல்லவென தெரிவித்த பொலிஸார், புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார் என்றார்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த புதுக்குடியிருப்பு பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு குறித்த பகுதியில் வெடிபொருட்கள் இருக்கிறதா என்பது தொடர்பாகவும் ஆராய்ந்து வருகின்றனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்