மரக்கறிகளை அதிக விலைக்கு விற்பனை செய்தால் சட்ட நடவடிக்கை

அத்தியாவசிய பொருட்களை நடமாடும் சேவை மூலம் வீடுகளுக்கு விநியோகிக்கும் வேலைத்திட்டம் நாடு பூராகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றது.

சில வர்த்தகர்கள் மரக்கறி மற்றும் பழவகைகளை அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரிய வந்துள்ளது.

இவ்வாறான வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக ஆயிரம் ரூபா பெறுமதியான நிவாரண பொதி பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டமும் தற்போது முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.