தீக்கிரையான கப்பல் மூழ்க தொடங்கியுள்ளது

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் கடலில்மூழ்க தொடங்கியுள்ளது என கடற்படை தெரிவித்துள்ளது.
கப்பலின் ஒரு பகுதிக்குள் நீர் செல்ல தொடங்கியுள்ளதால் கப்பல் மூழ்க ஆரம்பித்துள்ளது என கடற்படை தெரிவித்துள்ளது.

தீயை பெருமளவிற்கு கட்டுப்படுத்திவிட்டோம் ஆனால் கப்பலின் சில பகுதிகள் மூழ்க ஆரம்பித்துவிட்டன என கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். கப்பலை கடலின் ஆழமான பகுதிக்கு கொண்டுசெல்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்