தபாலகங்கள் அனைத்து நாளை திறப்பு

இந்த மாதத்துக்குரிய பொதுமக்களின் கொடுப்பனவுகளை செலுத்துதல், மருந்துகளை விநியோகித்தல் உள்ளிட்ட மட்டுப்படுத்தப்பட்ட கடமைகளுக்காக, நாளை (3) தொடக்கம் நாடளாவிய ரீதியில் உள்ள தபாலகங்கள், உப தபாலகங்களை திறந்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ள வரும் பயனாளிகளுக்காக குறித்த கொடுப்பனவுக்கான அட்டை அல்லது முதியோர் அடையாள அட்டை என்பவற்றை பாதுகாப்பு பிரிவினரிடம் முன்வைத்து, தபாலகங்கள் மற்றும் உப தபாலகங்களுக்குச் செல்லாம் என தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன் கொரோனா தொற்றின் முதலாவது அலையின் போது செயற்பட்டதைப் போன்று, சுகாதார சேவை அமைச்சு மற்றும் ஜனாதிபதி செயலணியின் கோரிக்கைக்கமைய, வீடுகளில் உள்ள நோயாளர்களுக்காக அரச வைத்தியசாலை கிளினிக்குகளால் வழங்கப்படும் மருந்துகளை விநியோகிக்கும் நடவடிக்கை தபால் திணைக்களத்தால் நாளை (3) தொடக்கம்ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளன.

இந்த விடயங்கள் குறித்து, சிக்கல்கள் இருக்குமாயின் 1950 என்ற துரித இலக்கத்துக்கு அழைத்து, தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்