கல்முனை பிரதேசத்தில் வீடு வீடாக சென்று அரசாங்கத்தின் 5000/-ரூபாய் கொடுப்பனவு வழங்கல்

(சர்ஜுன் லாபீர்)

நாட்டில் தற்போது துரிதமாக பரவிவரும் கொரோனா வைரஸ் இன் மூன்றாவது அலையின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5000/-ரூபாய் கொடுப்பணவு இன்று நாடு பூராகவும் வழங்கப்பட்டு வருகின்றது
அந்த வகையில் கல்முனை பிரதேச செயலகத்தினால் பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி தலைமையில்நேற்று (2) கல்முனைக்குடி-12,மருதமுனை -1 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில்  பயணத்தடை காரணமாக ஒவ்வொரு வீடுகளாக சென்று கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும்,மாவட்ட சமூர்த்தி பணிப்பாளருமான வி.ஜெகதீசன் கலந்து கொண்டு கொடுப்பணவுகளை வழங்கி வைத்தார்.மேலும்  இந் நிகழ்வுக்கு சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர் சாலீஹ், சமூர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.எஸ்.வரீரா,சமூர்த்தி திட்ட முகாமையாளர் எஸ்.சித்தி நயீமா, கல்முனைகுடி சமூர்த்தி  வலய வங்கி முகாமையாளர்  எம்.புவிராஜ், உதவி முகாமையாளர் எஸ்.எல் அஸிஸ்,சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.சம்சுதீன், அபிவிருத்தி உத்தியோகத்தர் பி.டி சபீனா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வு சுகாதார வழிமுறைகளை பின்பற்றி நாட்டில் பயணக்கட்டுப்பாட்டு நடைமுறையினையும் கருத்திற் கொண்டு குறிப்பிட்ட சிலரை மையப்படுத்தி ஆரம்பிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.