மன்னார் பொலிஸாரின் மனிதாபிமானம் மிக்க செயற்பாடு..

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டு காரணமாக மக்கள் மாத்திரம் இன்றி விலங்குகளும் உணவு இன்றி பாதிக்கப்பட்டுள்ளன.

பயணக்கட்டுப்பாடு காரணமாக மன்னார் மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் உணவகங்கள் மூடப்பட்டுள்ளதோடு, மக்களின் நடமாட்டம் இன்றி மன்னார் நகரம் காணப்படுகின்றது.

இதன் காரணமாக மன்னார் மாவட்டத்தில் உள்ள கட்டாக்காலி நாய்கள் உணவு இன்றி உள்ளன.

இந்த நிலையில் மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்டுல்ல வீரசிங்கவின், எண்ணக்கருவிற்கு அமைவாக மன்னார் மாவட்ட போக்குவரத்து பொலிஸ் பிரிவினர், இன்று(03) காலை கட்டாக்காலி நாய்களுக்கு உணவு வழங்கியுள்ளனர்.

மன்னார் பொலிஸாரின் இந்த மனிதாபிமானம் மிக்க செயற்பாடு தொடர்பாக சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்