மட்டக்களப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 21 வயது இளைஞன் திடீர் மரணம்!

மட்டக்களப்பு இருதயபுரம் பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞர் நேற்றிரவு 11 மணியளவில் மட்டக்களப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில், உயிரிழந்தவர் இருதயபுரம் 8 ஆம் குறுக்கு பகுதியைச் சேர்ந்த 21 வயதான சன்முகம் விதுசன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, கைது செய்யும் போது குறித்த இளைஞரைப் பொலிஸார் பலமாகத் தாக்கியதாகவும் இதனாலேயே உயிரிழந்துள்ளதாகவும் இளைஞனின் உறவினர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

உயிரிழந்துள்ளமைக்கான காரணம்  தொடர்பாக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்