களுத்துறை, கம்பஹா மாவட்டங்களுக்கு வெள்ள அபாயம்!

களு கங்கை மற்றும் களனி கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதன் காரணமாக குறித்த ஆறுகளின் கரையிலுள்ள சில பிரதேசங்களில் சிறிய அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, கம்பஹா, மினுவங்கொடை, ஜா-எல, மில்லனிய, களுத்துறை, ஹொரணை, இங்கிரிய மற்றும் மத்துகம ஆகிய  பகுதிகளில் சிறிய அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்