அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ/ இராமகிருஷ்ணா கல்லூரி(தே.பா)அதிபராக டேவிட் அமிர்தலிங்கம் கடமையினை பொறுப்பேற்றுக்கொண்டார்.

அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ/ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையின் தரம் 1அதிபராக 14/06/2021 இன்றைய தினம் திரு.J.R.டேவிட் அமிர்தலிங்கம் அவர்கள் மாகாண பாடசாலையில் இருந்து தேசிய பாடசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு அதே வலயத்தில் உள்ள அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ/ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் அதிபராக தனது கடமையினை பொறுப்பேற்றுக்கொண்டார். இன்றைய தினத்தில் இவர் திருக்கோவில் வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.யோ.ஜெயச்சந்திரன் முன்னிலையில் அதிபர் பதவியினை பொறுப்பேற்றுக்கொண்டார்.இதுவரை காலமும் கடமையாற்றிய திரு.அ.சுமன் அவர்கள் புதிய அதிபரிடம் கடமையை கையளித்தமை குறிப்பிடத்தக்கது.
அவர்கருத்து தெரிவிக்கையில்
இதுவரை காலமும் முகாமைத்துவக் குழு உறுப்பினர்களாக பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்களாக அதேபோன்று பல்வேறு நிலைகளில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியின் முன்னேற்றத்துக்காக என்னுடன் அர்ப்பணிப்புடன் கடமையாற்றிய அனைத்து உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.
மேலும் அதிபராக கடமையேற்ற திரு.J.R.டேவிட் அமிர்தலிங்கம் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் இதுவரை காலமும் அதிபராக கடமையாற்றிய திரு சுமன் அவர்கள் இந்த பாடசாலையிலே தெடர்ச்சியாக கடமையாற்றலாம் அவர் என்னுடன் இணைந்து இப்பாடசாலையினை முன்னேற்றப்பாதைக்கு கொண்டு செல்வதற்கு செயற்படுவார் என நான் விரும்புகின்றேன் மேலும் நான் இப் பாடசாலைக்கு மூன்று நோக்கத்துடன் இப் பாடசாலைக்கு வந்திருக்கின்றேன் அதனை நிறைவேற்ற வேண்டும் என்றுதான் இப் பாடசாலையின் அதிபர் கடமையினை நான் பொறுப்பேற்றுக் கொள்கின்றேன் முதலாவது ஒரு தேசிய பாடசாலை என்ற மமதையிலும் இருக்காமல் நான் அதிபராக கடமையாற்றவிருக்கும் பாடசாலைக்கும் திருக்கோவில் கல்வி வலயத்திற்கும் மிகவும் நெருக்கமான உறவினை ஏற்படுத்தவேண்டும். இரண்டாவது ராமகிருஷ்ணா மிஷன் மகாவித்தியாலயம் மற்றும் அக்கரைப்பற்று இராமகிருஷ்ணா கல்லூரிஇரண்டும் சகோதர பாடசாலைகளாகும். இரண்டு பாடசாலைக்கும் இடையில் நற்பு உறவாடவேண்டும், மூன்றாவது இரண்டு பாடசாலைகளும் திருக்கோவில் வலயத்தின் இரு தூண்களாகும் எதிர் காலத்தில் இரண்டு பாடசாலையும் வளங்களை பரிமாறிக்கொள்ளவேண்டும் இருபாடசாலையும் வளையத்திற்கு சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொடுக்கவேண்டும் என்பதே எனது குறிக்கோளாகும். எனவே அதிபராக கடமையாற்றிய திரு.அ.சுமன் அவர்கள் இக்கட்டான காலப்பகுதியில் பாடசாலையினை முன்னேற்றப்பாதைக்கு கொண்டுசென்றவர் அந்த வகையில் அவருக்கு எனது வாழ்த்தினையும் பாராட்டினையும் தெரிவித்துக்கொண்டு அதேபோன்று எனக்கும் இப் பாடசாலையில் அதிபராக கடமையாற்றி மாணவர்களின் கல்விச் செயற்பாட்டில் முன்னேற்றம் காண அனைத்து ஆசிரியர்கள் கல்வி சாரா உத்தியோகத்தர்கள் அனைவரும் பக்கபலமாக செயற்படவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

1 Comment

Sinthu Mass

Congrats
    • Reply
    • 1m

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.