கொவிட் 19 தடுப்பூசி வழங்குவதற்கான விழிப்புணர்வு நடவடிக்கை..!

நூருல் ஹுதா உமர்

காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்ஸீமா வசீரின் வேண்டுகோளுக்கிணங்க பொதுச் சுகாதார பரிசோதகர் தலைமையிலான குழுவினரினால் கொவிட்-19 தடுப்பூசி வழங்குவதற்கான விழிப்புணர்வு நடவடிக்கை காரைதீவு, மாவடிப்பள்ளி, மாளிகைக்காடு பிரதேசங்களில் இன்று (14) இடம்பெற்றது.

இந்த தடுப்பூசியானது முதற்கட்டமாக 60 வயதை தாண்டியவர்கள் மற்றும் பொது மக்களுடன் நேரடி தொடர்பினை வைத்திருக்கும் அரச உத்தியோகத்தர்கள், ஊழியர்களுக்கு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இவ் விழிப்புணர்வு நிகழ்வில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இணைப்பு செய்யப்பட்ட பல்நோக்கு அபிவிருத்தி செயலணி பயிலுநர்களும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்