முஸ்லீம் மக்களுக்கு விரோதமாக நடந்தவர்கள் தமிழ் இனவாதிகள் என கூறிய கலையரசன் எம்.பிக்கு பாராட்டு…

பாறுக் ஷிஹான்.

முஸ்லீம் மக்களுக்கு விரோதமாக நடந்தவர்கள்  தமிழ்  இனவாதிகள் என   தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன் கூறியிருப்பதை பாராட்டுவதாக  என உலமா கட்சி தலைவர் முபாரக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் கல்முனையில் அமைந்துள்ள  உலமா கட்சி காரியாலயத்தில் இன்று(14)  நடைபெற்ற விசேட  ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு  தொடர்ந்தும்   கருத்து வெளியிட்ட அவர்

முஸ்லீம் தமிழ் கட்சிகளின் பொதுவான போக்கு தேர்தலுக்கு பின்னர் ஒரு பேச்சு.அதற்கு முன்னர் ஒரு பேச்சு.தேர்தலுக்கு முன்னர் முஸ்லீம் காங்கிரஸ் தரப்பில் தமிழரா என எதிர்ப்பது மற்றும் தமிழர் தரப்பில் முஸ்லீமா என எதிர்ப்பதே தொடர்கதையாகிறது.இதன் பின்னர் தேர்தலின் பின்னர் தமிழ் முஸ்லீம் கட்சிகள்  வேறொன்றை பேசுவதை வழமையாக பார்க்கின்றோம்.இந்த வகையில் அந்த காலத்தில் கலையரசன் எம்.பி போன்றவர்கள் முஸ்லீம் மக்களுக்கு விரோதமாக நடந்தவர்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.முஸ்லீம்களுக்கு எதிராக இனவாதம் பேசியவர்களில் கலையரசன் என்பவரும் ஒருவராவார்.

தமிழ் பிரதேச செயலகத்தை பிரிந்து முஸ்லீம் பிரதேச செயலகம் வேறாகவும் தமிழ் பிரதேச செயலகம் வேறாகவும் வர வேண்டும் என கூறியவரும் கலையரசன் ஆவார்.இவர் தற்போது கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கும் முஸ்லீம் மக்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினைகளின் முக்கிய காரணம் தமிழ் இனவாதம் தான் என்பதை பகிரங்கமாக ஒரு ஊடகத்தின் வாயிலாக  ஏற்றுக்கொண்டுள்ளார்.முதலில் அவர்  இந்த உண்மையை இவ்வாறு ஏற்றுக்கொண்டமைக்கு பாராட்டு தெரிவிக்க விரும்புகின்றேன்.
1980க்கு முன்னர் வடக்கு கிழக்கு பகுதிகளில் தமிழ் முஸ்லீம் மக்கள் மிக ஒற்றுமையுடனே வாழ்ந்து வந்தார்கள்.1980 பின்னர் தமிழ் ஆயுதக்குழுக்கள் முஸ்லீம்கள் மீது ஆயுதங்களினால் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தன.இதனால் அவர்கள் மீது முஸ்லீம்களுக்கு பயம் ஏற்பட்டிருந்தது.இந்த பயத்தினை போக்குவதற்காக தான் முஸ்லீம் தரப்பிலும் ஆயுதம் ஏந்தியிருந்தார்கள்.இதனை விட முஸ்லீம் மக்கள் தமிழ் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாகவும் இருந்தார்கள்.எனினும் வட மாகாணத்தில் 1 இலட்சத்திற்கும் அதிகமான முஸ்லீம் மக்கள் புலிகளினால் விரட்டியடிக்கப்பட்ட கொடுமைகளையும் கண்டோம்.
ஆகவே கலையரசன் கூறுவதை போன்று ஆயுதம் தாங்கிய போராளிகள் மேற்கொண்ட செயற்பாடு காரணமாக தான் முஸ்லீம் தமிழ் மக்களுக்கு இடையே பிளவு ஏற்பட்டது என்பதை தெளிவு படுத்துகின்றார்.எனவே இந்த நேரத்தில் அவர் குறித்த உண்மையை கூறியதற்காக பாராட்டுகின்றோம்.எங்களை பொறுத்தவரை தமிழ் முஸ்லீம் ஒற்றுமையினையை விரும்புகின்றோம் என குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்