புலம்பெயர் உறவுகள் மற்றும் உள்ளுர் உறவுகள் அரச உத்தியோகத்தர்கள் உள்ளிட்டவர்களின் நிதியீட்டத்தின் மூலம் ஆலையடிவேம்பில் 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான உலர் உணவுப்பொதிகள்.

வி.சுகிர்தகுமார் .

  கொவிட் 19 மூன்றாம் அலை காரணத்தினால் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட 70 வயதிற்கு மேற்பட்ட பொது நலன் உதவி பெறும் வருமானம் குறைந்த முதியோர்களுக்கான உலர் உணவுப்பொதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டன.

புலம்பெயர் உறவுகள் மற்றும் உள்ளுர் உறவுகள் அரச உத்தியோகத்தர்கள் உள்ளிட்டவர்களின் நிதியீட்டத்தின் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களே இன்று ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினரின் உதவியுடன் வழங்கி வைக்கப்பட்டன.

இவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட்ட 1600 ரூபா பெறுமதியான 250 பொதிகள் பிரதேச செயலகத்தில் கையளிக்கப்பட்டதுடன் பிரதேச செயலாளரின் அறிவுறுத்தலுக்கு அமைய கிராமங்கள் ரீதியாக பாதிக்கப்பட்டு;ள்ள முதியவர்களுக்கு முதற்கட்டமாக வழங்கப்பட்டன.

இந்நிலையில் நிவாரணப் பொருட்களை பிரதேச செயலாளர் வி.பபாகரன் மற்றும் அம்பாரை மாவட்ட சிவில்; சமூக அமைப்புக்களின் கொவிட் தடுப்பு செயலணி இணைப்பாளர் வி.பரமசிங்கம் ஆகியோர் பார்வையிட்டதுடன் பணியில் ஈடுபடுகின்றவர்களுக்கு ஆலோசனையும் வழங்கினார்.

மேலும் சுகாதார நடைமுறைகளுடன் நிவாரணம் வழங்கப்படவேண்டும் எனவும் கண்டிப்பான உத்தரவை பிறப்பித்தார்.

முற்றிலும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இடம்பெற்ற நிவாரணம் வழங்கும் பணியில் ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினர் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டதுடன் பொதுமக்களின் வீடுகளுக்கு கொண்டு சென்றும் கையளித்தனர்.

இதேநேரம் தொடர்ந்தும் இப்பணி முன்னெடுக்கப்படும் நிலையில் பயணத்தடை காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அதிகளவான மக்கள் நிவாரணத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.