ஆயுள் வேத பொதிகள் விநியோகத் திட்டம் ஆரம்பம்

[நூருல் ஹுதா உமர்]

நாட்டில் கொரோனா அலை வேகமாக அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில் நிந்தவூர் ஆயுள் வேத ஆராய்ச்சி வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் கே.எல். நக்பர் அவர்களினால் தொடர்ந்தும் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கும் பூஸ்டர்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் கொவிட் 19 தடுப்பு ஆயுள் வேத விழிப்புணர்வு திட்ட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆயுள் வேத பூஸ்டர் பொதிகள் விநியோகத்  திட்டம் நேற்றைய தினம்  ஆரம்பிக்கப்பட்டது.

நிந்தவூர் ஆயுள் வேத ஆராய்ச்சி வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் கே.எல். நக்பர் அவர்களினால் கடந்த முதலாம், இரண்டாம் அலைகளின் போதும் பல்லாயிரக்கணக்கான நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கும் பூஸ்டர்கள் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்