நிந்தவூர் மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலையில் புதிய விடுதி நிர்மாணிக்க அடிக்கல் நடும் நிகழ்வு

(  பாறுக் ஷிஹான்)

நிந்தவூர் ஆயுள்வேத மாவட்ட வைத்தியசாலையில் 13 மில்லியன் ரூபாய் செலவில் வலது குறைந்தவர்கள் மற்றும் பக்கவாத நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்டவுள்ள நோயாளர் விடுதிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு  திங்கட்கிழமை(14) இடம்பெற்றது.

நிந்தவூர் ஆயுள்வேத மாவட்ட வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எம்.ஏ.நபீல் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.சீ.பைசால் காசிம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கட்டிடத்திற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜீ.சுகுணன், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் எம்.வீ.ஏ.வாஜீத், நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர்கள், வைத்தியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்