முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடற்கரை பகுதியில் பாரிய வெடிபொருள் மீட்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முள்ளிவாய்க்கால் கடற்கரை பகுதியில் விடுதலைப் புலிகளால் தயாரிக்கப்பட்ட பாரிய வெடிபொருள் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதி மீனவர்கள் கரைவலைத் தொழிலில் ஈடுபட்டுள்ள நிலையில் மீனவர்களின் வலையில் சிக்குண்டு குறித்த வெடிபொருள் கரைக்கு வந்துள்ளது.

இவ்வாறு கரைக்கு வந்த பொருள் வெடிபொருள் என மீனவர்களினால் அடையாளம் காணப்பட்டு சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த வெடிப்பொருளை அகற்றுவது தொடர்பில் முல்லைத்தீவு பொலிசார் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த கால போரின் போது, இந்த வெடிபொருள் கடலில் போடப் பட்ட நிலையில், தற்போது வலையில் சிக்கி கரை ஒதுங்கி இருக்கலாம் என சந்தேகிக்கப் படுகின்றது.

குறித்த வெடிபொருள் விடுதலைப் புலிகள் தங்களுடைய போர்க் கப்பல்களில் பொருத்துவதற்காக தயாரித்ததாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது

றது.received 848781912723250

received 3183011648592408

 

received 534460261330581

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்