சைக்கிளில் வந்து, மோட்டார் சைக்கிளில் சென்ற திருடன்!

சைக்கிள் ஒன்றில் வந்த நபரொருவர், ஓர் இடத்தில் சைக்கிளை நிறுத்தி விட்டு, அங்கிருந்த மோட்டார் சைக்கிளைத் திருடிச் சென்றுள்ள சம்பவமொன்று, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லாப் பிச்சை வீதியில் நேற்றிரவு ((14) இடம்பெற்றுள்ளது.

வாழைச்சேனையைச் சேர்ந்த நபரொருவரின் EP –BCV 8533 எனும் இலக்கமுடைய கறுப்பு நிற பல்சர் மோட்டார் சைக்கிளே இவ்வாறு திருடப்பட்டுள்ளதாக, வாழைச்சேனை பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கைவிட்டுச் சென்றுள்ள சைக்கிளைக் கைப்பற்றியுள்ள வாழைச்சேனை பொலிஸார், மோட்டார் சைக்கிள் திருடனைத் தேடி வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்