கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையினால் அதிரடி சுகாதார சோதனை நடவடிக்கைகள் முன்னெடுப்பு

 கல்முனை பிராந்தியத்தில்  கொறோனா தொற்றினைகட்டுப் படுத்தும் முகமாக
கல்முனை பிராந்திய  சுகாதார பணிமனையினால் அதிரடி சுகாதார சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும்   இடம்பெற்று வருகின்றது.
இதற்கமைய  சுகாதார நடைமுறைகளை பேணாமல் பயணம் மேற்கொண்டோர் மீது கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையின் பணிப்பாளர் ஜீ .சுகுணன் அவர்களின் தலைமையில் கல்முனை பிராந்திய சுகாதார பணிமனை   பிரிவில் உள்ள பிரதான வீதியில்பயணம் மேற்கொண்டவர்கள் உரிய முறையில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செல்கின்றார்களா என இன்று (16) கண்காணிக்கப்பட்டதுடன் தேவையான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி ஏ.ஆர்.எம்.அஸ்மி ,பொது சுகாதார பரிசோதகர்கள் ,இராணுவத்தினர் ஆகியோர் கலந்து

கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்