கொரோனாவின் அலையிலிருந்து மக்களை பாதுகாக்க பிரதேச சபையினருடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட சுகாதாரத்துறை.

[நூருள் ஹுதா உமர்]
காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரோணா அலையை கட்டுப்படுத்தி கொரோணா தொற்றுக்குள்ளான மரணத்தை இல்லாமலாக்க எவ்வகையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பிலான காரைதீவு பிரதேச சபையினருடனான கலந்துரையாடல் இன்று (16) காரைதீவு விபுலானந்த மண்டபத்தில் நடைபெற்றது.
காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா பஷீர், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி. ஜெயசிரில், காரைதீவு பிரதேச சபை உதவித்தவிசாளர் அ.ம. ஜாஹீர், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்கள், காரைதீவு பிரதேச சபை செயலாளர், காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர், பொதுச்சுகாதார பரிசோதகர் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த கலந்துரையாடலின் போது கடந்த காலங்களில் நடைபெற்ற புரிந்துணர்வுன்மை நிலை தொடர்பில் பிரதித்தவிசாளர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் எம்.என்.எம்.ரணீஷ் ஆகியோர் இங்கு கருத்து வெளியிட்டதுடன் எதிர்வரும் காலங்களில் எவ்வாறு சிறப்பாக செயற்பட்டு தொற்றை கட்டுப்படுத்தலாம் என்பது தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. எவ்வகையான முறையில் அண்டிஜன் பரிசோதனை நடைபெறுகிறது, கொரோணா தொற்றாளரை எப்படி சுகாதார துறை கையாள்கிறது, பிழையான தகவல்களினால் சுகாதார துறை சார்ந்த ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், மக்கள் மத்தியில் உள்ள தெளிவின்மைகள் தொடர்பிலும் இங்கு மேற்பார்வை பொதுச்சுகாதர பரிசோதகர் எஸ். வேல்முருகு தெளிவுபடுத்தினார். அவசர கால நிலைகளில் வழங்கப்படும் அனுமதிப்பத்திர முறைகேடுகள் தொடர்பிலும், கொரோணா கட்டுப்பாடு தொடர்பிலும் இங்கு விரிவாக ஆராயப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்