நாவற்குழியில் புகையிரத பாதையில் இருந்த தண்டவாளத்தில் இருந்த பொருத்தும் கிளிப்புகளை திருடிய மற்றும் வாங்கிய குற்றச்சாட்டில் 5 பேர் கைது

நாவற்குழியில் புகையிரத பாதையில் இருந்த தண்டவாளத்தில் இருந்த பொருத்தும் கிளிப்புகளை திருடிய மற்றும் வாங்கிய குற்றச்சாட்டில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

புகையிரத சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் கடந்த 14 ஆம் திகதி தண்டவாளப் பாதையில் உள்ள பொருத்துக் கிளிப்புகள் திருடப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாண பொலிஸார், திருடப்பட்ட புகையிரத தண்டவாள கிளிப்புகளை கொள்வனவு செய்து உடமையில் வைத்திருந்த ஐந்து சந்தியைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவரைக் கைது செய்தனர்.

அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் அரியாலையைச் சேர்ந்த 24 வயதுக்குட்பட்ட நால்வர் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கிளிப்புகள் கழற்றப்பட்ட நிலையில் புகையிரதம் பயணித்தால் தடம்புரளும் ஆபத்து காணப்படுவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்