கல்முனை GK சினிமெக்ஸ் திரையரங்க நிறுவனத்தினரால் 20 இலட்சம் பெறுமதியான உலர் உணவப் பொதிகள் விநியோகம்…

அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பாண்டிருப்பு பிரதேசத்தில் இயங்கிவரும் GK சினிமெக்ஸ் திரையரங்க நிறுவனத்தினரால் (20.06.2021) ம் திகதி COVID 19 இனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதநேய நிவாரணப் பணி அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கௌரவ வேதநாயகம் ஜெகதீசன் தலமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த மனித நேய நிவாரணப் பணிக்கு ரூபா 20 இலட்சம் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் 1200 குடும்பங்களுக்கு GK சினிமெக்ஸ் திரையரங்க நிறுவனத்தினரால் விநியோகிக்கப்பட்டது.
பிராந்தியத்தில் இந் மனிதநேய நிவாரணப் பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் GK சினிமெக்ஸ் திரையரங்க நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் நவரெட்ணம் இராஜேஸ்வரன் அவர்கள் மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் அவர்களின் வேண்டுகோடுக்கு இணங்க இந்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிவாரணப் பணியானது பெரியநீலாவணை, மருதமுனை, பாண்டிருப்பு, கல்முனை, நற்பெட்டிமுனை. மனற்சேனை, சேனைக்குடியிருப்பு, திரவந்தியமேடு, நாவிதன்வெளி, சவளக்கடை, சொறிக்கல்முனை. குளனிகள், அக்கரைப்பற்று, ஆலயடிவேம்பு மற்றும் பெரிய கல்லாறு போன்ற பிரதேசங்களில் வாழும் COVID 19 காரணமாக வாழ்வாதரம் இழந்த மக்களுக்கு வழங்கப்படவுள்ளது.
இந் நிகழ்வில் சமூக சேவையாளர்களான சு.நிதாசன், சி. சிறீரங்கன், த.சுதன்,நா.சுகிர்தன் வே.அரவிந்தன், ஜெயந்த மற்றும் வதுசன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.