கடன் அட்டை மூலம் பண மோசடியில் ஈடுபட்ட சீனர் உட்பட்ட மூவர் கைது..!

போலி கடன் அட்டையை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதில் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர்களில் ஒரு சீன பிரஜையும் உள்ளடங்குவதாக அவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கண்டி, வரக்காபொல மற்றும் கல்கிஸையில் வசித்து வருபவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
இணையவழி ஊடாக (Online) பொருட்கள் வழங்கும் நிறுவனம் அளித்த முறைப்பாட்டினைத் தொடர்ந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பதில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இன்று (21) தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட நபர்கள் கடந்த இரண்டு நாட்களுக்குள் 787,000 ரூபா மோசடி செய்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் இதன்போது குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்