டிப்பர் சாரதி சுட்டுக்கொலை – இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் பாதுகாப்பு பிரிவை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது

டிப்பர் சாரதியொருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் பாதுகாப்பு பிரிவை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு சின்ன ஊரணியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் இடம்பெற்றவேளை அமைச்சர் வீட்டில் இருக்கவில்லை என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் உத்தியோகத்தருக்கும் கொல்லப்பட்ட டிப்பர் சாரதிக்கும் இடையில் சிலநாட்களிற்கு வாக்குவாதம் இடம்பெற்றதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பொலிஸ்உத்தியோகத்தர் ஆயுதங்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்