கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவுகளில் கொரோனா பராமரிப்பு சிகிச்சை நிலையம் திறப்பு !

[வி.சுகிர்தகுமார்]

  கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பிரிவுகளில் அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலையின் ஒரு பகுதியில் அமைக்கப்பட்ட 4ஆவது கொரோனா பராமரிப்பு சிகிச்சை நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணி;;ப்பாளர் ஜி.சுகுணன் தலைமையில் இடம்பெற்ற திறப்பு விழாவில் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.தௌபீக் கலந்து கொண்டு சிகிச்சை நிலையத்தை திறந்து வைத்தார்.

நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் மற்றும் ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி திருமதி எஸ்.அகிலன் அக்கரைப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எம்.எப்.ஏ.காதர் அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலை பொறுப்பதிகாரி வபா உள்ளிட்ட சுகாதார துறை அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

கொரோனா பராமரிப்பு சிகிச்சை நிலையத்தை திறந்து வைத்த கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சிகிச்சை நிலையத்தை பார்வையிட்டதுடன் தேவைகள் தொடர்பிலும் அறிந்து கொண்டார்.

மேலும் இங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் கடந்த  மணித்தியாலத்தில் கிழக்கு மகாணத்தில் 146 நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதுடன் இருவர் மரணமடைந்துள்ளனர்.

இதேநேரம் கிழக்கு மாகாணத்தில் கல்முனை பிராந்தியத்தை பொறுத்தமட்டில் குறைந்த நோயாளர்களே இதுவரை இனங்காணப்பட்டுள்ளனர். ஆனாலும் தற்போது அதிகரித்து வருவதை அனுமானித்து நோயாளரின் நலன் கருதி புதிய கொரோனா சிகிச்சை நிலையங்களை உருவாக்கியுள்ளோம்.

ஏற்கனவே பாலமுனை மருதமுனை ஆகிய இரு நிலையங்கள் இருந்தன. இதற்கு மேலதிகமாக இன்று அட்டாளைச்சேனை ஆயுர்வேத வைத்தியசாலை மற்றும் அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலைகளை சிகிச்சை நிலையங்களாக மாற்றியுள்ளோம்.

இதன்பிரகாரம் அட்டாளைச்சேனை ஆயுர்வேத வைத்தியசாலையில் 40 நோயாளிகளும் மற்றும் அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலையில் 100 நோயாளிகளும் தங்கி இருந்து சிகிச்சை பெறமுடியும் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்